fbpx

தொடரை வெல்லப்போவது யார்..? சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை..!!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளியில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இன்றைய போட்டியில் மிகச் சிறந்த வீரர்கள் அடங்கிய அணி களம் இறக்கப்படும் என்று தெரிவித்தார். சேப்பாக்கம் மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்திய வீரர்களை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Chella

Next Post

டெல்லியில் பயங்கரம்..!! வீட்டை விட்டு ஓடிய குஷ்பு..!! ட்விட்டரில் அவரே போட்ட பதிவு..!!

Wed Mar 22 , 2023
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், இந்தியாவில் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர். ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. […]

You May Like