fbpx

இந்தியாவில் ஏன் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது…? நிபுணர்கள் விளக்கம்…

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொரோனா காரணமாக 29 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 5,31,064 ஆக அதிகரித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 2 மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன.. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,527 பேருக்கும், மகாராஷ்டிராவில் 1086 பேருக்கு தொற்று உறுதியானது..

ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது… இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் இந்தியாவில் திடீரென கொரோனா அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது.. கோவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டது, கொரோனா பரிசோதனை குறைந்தது மற்றும் புதிய கோவிட் மாறுபாடு வருகை ஆகியவற்றால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் “ காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி, வாசனை அல்லது சுவை இழப்பு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. அடிக்கடி கைகளை கழுவுதல், நெரிசலான இடங்களில் மாஸ்க் அணிவது முக்கியம். மேலும் நெரிசலான பகுதிகள் மற்றும் மோசமான காற்றோட்டம் உள்ள பகுதிகளை தவிர்க்க வேண்டும்..” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவரும் IMA இன் முன்னாள் தலைவருமான டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் இதுகுறித்து பேசிய போது “ நோய் எதிர்ப்புச் சக்தி படிப்படியாகக் குறைவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கைவிடுவது மற்றும் மரபணு மாற்றங்கள் ஆகியவை கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு சில காரணங்கள்.. கொரோனா என்பது ஒரு சுழற்சி வைரஸ் நோயாகும், அதாவது அவ்வப்போது எழுச்சிகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைதல், முன்னெச்சரிக்கைகள் குறைதல், அதிக , பயணம் மற்றும் மரபணு மாற்றங்கள் ஆகியவை மனித நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து வைரஸ் தப்பிக்க அனுமதிக்கின்றன.

ஆனால் இந்தியாவில் சமீபகாலமாக ஒமிக்ரான் வகை கொரோனா மாறுபாடு பரவுகிறது.. இது டெல்டா மாறுபாட்டை போலல்லாமல், நுரையீரலை நேரடியாகத் தாக்கும் வாய்ப்பு குறைவு. இருப்பினும், ஒமிக்ரான் அடிப்படை நோய் நிலைமைகளை மோசமாக்குகிறது. தீவிர விளைவுகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக வயதானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்களிடையே குறைவான கடுமையான நோயை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது,” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையா..?

Fri Apr 14 , 2023
இந்தோனேசியாவில் இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் ஜாவா தீவின் வடக்கே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 594 கிலோமீட்டர் (370 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 160 […]

You May Like