தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே நாகலுார் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ். (வயது 21). இவர் பாபநாசம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி, அபினேஷ் அந்த சிறுமியை தென்னந்தோப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அபினேஷின் நண்பர்களான ஸ்ரீகாந்த் (21), அரவிந்தன் (21), ஸ்ரீதரன் (24) ஆகிய மூன்று பேர் மறைந்து நின்றுள்ளனர். கொஞ்சம் நேரம் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த அபினேஷ், பின்னர் தனது நண்பர்களை அழைத்துள்ளார்.
அவர்களை பார்த்ததும் சிறுமி பதறிப்போனார். இவர்கள் இங்கே எதற்கு வந்துள்ளார்கள் என்று பயத்துடன் கேட்டார். ஆனால், அந்த 4 கொடூரன்களும் சிறுமியை மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இதனை அரவிந்தன் தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். அதை செல்போனில் பார்த்து ரசித்த 4 பேரும் தங்கள் நண்பரான ராகுல் என்கிற குட்டி (24), என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவை பார்த்த ராகுல் நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளார். நடந்ததை வெளியே சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
அந்த பயத்தில் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லாமல் மறைத்துள்ளார். ஆனால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை பார்த்த சிலர், இது குறித்து சைல்டு லைனுக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை செய்த பிறகு பாபநாசம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் பேரில், அபினேஷ், ஸ்ரீதரன், ஸ்ரீகாந்த், அரவிந்தன், ராகுல் ஆகிய 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.