fbpx

இறுதிச்சடங்கில் சிரித்து கொண்டே போட்டோவுக்கு போஸ் கொடுத்தது ஏன்..? குடும்பத்தினர் விளக்கம்…

சமூக வலைதளங்களில் தினமும் ஏதாவது ஒரு விஷயம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மூதாட்டியின் இறுதிச்சடங்கில் குடும்பமே சிரித்த படி போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது… கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மல்லப்பள்ளியை சேர்ந்த மரியம்மா என்ற 95 வயது மூதாட்டில் கடந்த வாரம் காலமானார்.. இந்நிலையில் அந்த மூதாட்டின் உடலுக்கு அருகே, அவரது குடும்பத்தினர் சிரித்த படி போஸ் கொடுத்த போட்டோ வைரலானது.. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், கடுமையாக விமர்சித்து வந்தனர்.. மேலும் குடும்பத்தினர் ஏன் சிரிக்கின்றனர் என்று பலரும்கேள்வி எழுப்பி வந்தனர்..

இந்நிலையில் உயிரிழந்த அந்த மூதாட்டின் குடும்பத்தை பாபு உமன் என்ற நபர் ஊடகங்களுக்கு தனது கருத்தை தெரிவித்தார். முதலில் இந்த படம் வைரலாவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.. மேலும் “ இறந்து போன ‘பாட்டி’ தன் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்தார். அவளுடைய குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அவளை மிகவும் நேசித்தார்கள். தாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த சந்தோஷமான நேரத்தை நினைவு கூறவே இந்த புகைப்படம் எடுத்ததற்கு காரணம்..” என்று தெரிவித்தார்..

மூதாட்டியின் குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்தப் படத்தின் அர்த்தத்தை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. பெரும்பாலானோர் இறந்த பிறகு கண்ணீரைப் பார்க்கிறார்கள். ஆனால் மரணமும் ஒரு பிரியாவிடைதான். மேலும் விடைபெறும் நேரத்தில் வருத்தமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.. புன்னகையுடன் விடைபெற வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம். இறுதியில், நான் என் பாட்டியிடம் புன்னகையுடன் விடைபெற்றேன்.” என்று தெரிவித்தார்..

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் கேரள கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி இதுகுறித்து பேசியுள்ளார்.. அவர் “ மரணம் மிகவும் துக்கமானது. ஆனால் அதே நேரத்தில் அது பிரியாவிடையும் கூட. குடும்பம் ஒன்றாக மகிழ்ச்சியான தருணங்களை கழித்தது. ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்தவர்கள் ஏன் ஒருவரிடம் விடைபெறும்போது கண்ணீர் மட்டும் சிந்த வேண்டும்?” மேலும், இந்தப் படம் எந்த விதமான கெட்ட வார்த்தைகளுக்கும், மோசமான கருத்துகளுக்கும் தகுதியானது அல்ல..” என்று தெரிவித்துள்ளார்.

Maha

Next Post

கூலிப்படை வைத்து மருமகனை கொலை செய்த மாமியார்; காரணம் இதுதான்... அதிர்ச்சி தகவல்..!

Thu Aug 25 , 2022
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் அண்ணாமலை அள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா (41) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு […]

You May Like