fbpx

”இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க”..? பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேள்வி கேட்ட பெண்..!!

ஹரியானா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏவின் கன்னத்தில் பெண் தாக்கியதோடு, ”இப்போது ஏன் இங்கே வந்தீர்கள்” என கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. டெல்லி யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இமாச்சலில் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளனர். இதுவரை 88 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி உள்ள நிலையில், 16 பேர் மாயமாகி உள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேபோல் ஹரியானாவிலும் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அம்பாலா உள்பட பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதேபோல், குல்லா பகுதியில் காகர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தடுப்பணை உடைந்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. இதற்கிடையே, மக்கள் பிரதிநிதிகள் யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஹரியானாவை ஆளும் பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி எனும் ஜனயாக் ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது அங்கு வசிக்கும் மக்கள் அவரை சூழ்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த வேளையில் இப்போது மட்டும் ஏன் இங்கே வந்தீர்கள்? எனக்கூறி பெண் ஒருவர் எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கின் கன்னத்தில் அடித்தார். அதாவது எம்எல்ஏ ஈஸ்வர் சிங் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திருந்தால் அணை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அந்த பெண் மற்றும் பொதுமக்கள் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் அந்த பெண்ணை தடுத்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ ஈஸ்வர் சிங் கூறுகையில், ”மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் நினைத்திருந்தால், அணை உடைவதை தடுத்து இருக்கலாம் என என்னிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது இது இயற்கை பேரிடரால் உடைந்ததாக எடுத்துக் கூறி விளக்கமளித்தேன்” என்றார்.

Chella

Next Post

மழை வெள்ளங்களில் இருந்து உங்கள் வாகனங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி..? சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Thu Jul 13 , 2023
ஆற்றின் மேல் இருக்கும் பாலங்கள் மற்றும் சாலைகள் உடைவது, ஆற்று வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவது போன்ற பல வீடியோக்களை நாம், சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். அந்தவகையில், நீங்கள் உயரமான மலைப்பகுதிகளில் வசிப்பவர் என்றால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களை சமாளித்து உங்கள் கார்களையும், உங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படும் என்பதை நம்மால் […]

You May Like