பொதுவாக இஸ்லாமியர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை ஒரு தெய்வீக வார்த்தையாகவே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது அந்த வார்த்தையை கொச்சைப்படுத்தும் விதமாக, இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு பெண் செய்த செயல், அந்த நாட்டு இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த இழிவான செயலை செய்த வினா முகர்ஜி என்பவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்றும், இவர் ஒரு டிக் டாக் பிரபலம் என்றும் கூறப்படுகிறது.இவர் பன்றிக்கறியை சாப்பிடுவதற்கு முன்பாக பிஸ்மில்லாஹ் என்று தெரிவித்து, அந்த இறைச்சியை சாப்பிட்டுள்ளார். மேலும் அவர் இறைச்சி சாப்பிட்டதை வீடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார்.
இது இஸ்லாமியர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு, இந்தோனேசியா நீதிமன்றம், இரண்டு வருட கால, கடுங்காவல் தண்டனை விதித்ததோடு அபராதமும் விதித்துள்ளது.
இவர் டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் என்பதால், இவரை டிக் டாக் செயலியில் ஏராளமான நபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அந்த விதத்தில் இவர் வெளியிட்ட அந்த வீடியோ, மிகப்பெரிய வைரலாக பரவியது. இதன் காரணமாக, இஸ்லாமியர் இடையே இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறக்கூடும் என்பதால், நீதிமன்றம் அவர் மீது இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இருந்தாலும் அவர் மீது இஸ்லாமியர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. இவர்மீது இந்த நிலையில், நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால், இது அவர் மீது இஸ்லாமியர்கள் கொண்டுள்ள கோபத்தை அதிகப்படுத்தும், அதோடு அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இழிவாக மாறிவிடும் என்பதால், நீதிமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வினா முகர்ஜி டிக் டாக்கில் வெளியிட்ட அந்த வீடியோவில் தன்னுடைய கையில் பன்றி இறைச்சி துண்டு ஒன்றை வைத்துக் கொண்டுள்ளார். அதனை சாப்பிடுவதற்கு முன்னதாக இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும், அவர்கள் ஒரு தெய்வீக வார்த்தையாக பயன்படுத்தும் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை சொல்லிவிட்டு, அந்த பெண்மணி அந்த பன்றி இறைச்சியை சாப்பிடுகிறார்.
பிஸ்மில்லாஹ் என்ற சொல்லுக்கு அரபி மொழியில் இறைவனின் பெயரால் என்று பொருள் என சொல்லப்படுகிறது. இஸ்லாமியத்தை பொறுத்தவரையில், பன்றி இறைச்சியை யாருமே சாப்பிடுவது இல்லை. ஆகவே இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்ட ஒரு இறைச்சியை இஸ்லாமியர்கள் தெய்வீகமாக சொல்லும் ஒரு வார்த்தையை உபயோகித்து, ஒரு பெண்மணி சாப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆகவே அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நீதிமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை அவர் மீது மேற்கொண்டுள்ளது.