fbpx

தூக்கமின்மை ஏன் ஏற்படுகிறது..? காத்திருக்கும் மிக மோசமான பாதிப்புகள்..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மொபைல் போன், ஸ்மார்ட் டிவி என பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகரித்துவிட்ட தற்போதைய சூழ்நிலையில், தூக்கமின்மை பிரச்சனையை பலரும் எதிர்கொள்கின்றனர். தூக்கமின்மை ஏன் ஏற்படுகிறது? அதனை எப்படி எதிர்கொள்வது? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நம் வாழ்வின் அத்தியாவசியங்களின் வரிசையில் உணவு தண்ணீருக்கு அடுத்தபடியாக தூக்கத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு நாள் சரியான தூக்கம் இல்லை என்றாலே அடுத்த நாள் நம்முடைய வேலைகள் பாதிக்கப்படுவதை உணர முடியும். தூங்க ஆரம்பிக்கும் நிலையில், தூக்கம் வராமல் இருப்பது, தூங்கும் பொழுது அடிக்கடி விழித்துக் கொள்வது, தூங்கி எழுந்த பிறகு சோர்வாக உணர்வது, பகலில் வேலை செய்யும் சமயத்தில் வேலையில் கவனம் இல்லாமல் தூக்க கலக்கத்தில் இருப்பது போன்றவைகள் தூக்கமின்மையின் அறிகுறிகள் எனக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

குறித்த நேரத்தில் தூங்காமல் தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருப்பது, அதிக நேரம் கணினி, செல்போன்கள், டிபி பார்ப்பது போன்றவை நம் தூக்கம் முறைகளை மாற்றி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். தூங்கும் காபி அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தூங்கும் சமயத்தில் மின் விளக்குகள், தொலைக்காட்சி போன்றவற்றை அனைத்து விட்டு அமைதியான சூழலில் தூங்க வேண்டும். தூக்கத்தை தடுக்கும் மாத்திரைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வேறு எந்த பிரச்சனையும் இல்லை ஆனாலும் தூக்கம் வருவதில்லை என்பவர்கள் கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

Chella

Next Post

ஆபத்து..!! இந்திய கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி..!! அமெரிக்காவின் முக்கிய எச்சரிக்கை..!!

Tue Apr 4 , 2023
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்புக்களால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த இருமல் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் தடை விதித்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கண் சொட்டு மருந்தில் கிருமிகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேருக்கு கண்பார்வை […]

You May Like