fbpx

”ஏன் வேலைக்கு போகல”..? மாமனார் கேட்ட கேள்வியால் கடுப்பான வீட்டோட மருமகன்..!! ஆத்திரமடைந்ததால் அம்மிக்கல்லில் மோதிய தலை..!! ரத்த வெள்ளத்தில் பலி..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 60). மாற்றுதிறனாளியான இவர், வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகள் ஆஷா (28). இவரது கணவர் கார்த்தி (30) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மாமனார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கார்த்தி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்து மாமனார் ரவிக்குமார், கார்த்தியை ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, ரவிக்குமாரை தள்ளிவிட்டதில் அருகில் இருந்த அம்மிக்கல்லில் ரவிக்குமாரின் தலை மோதியது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்து சீர்காழி போலீசார், ரவிக்குமாரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, தப்பியோடிய மருமகன் கார்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கிரீஷ்மா..!! குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு..!! தண்டனை விவரம் நாளை அறிவிப்பு..!!

English Summary

When father-in-law Ravikumar asked Karthi why he didn’t go to work, the two got into an argument.

Chella

Next Post

மத்திய பட்ஜெட் 2025 | தனிநபர் வருமான வரியை மத்திய அரசு குறைக்க வாய்ப்பு..!! -  ICRA அறிக்கை

Fri Jan 17 , 2025
Centre likely to announce personal income tax relief in upcoming Budget 2025

You May Like