fbpx

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்…

மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 18-ம் தேதி அறிவித்தார்.. எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்..

மேலும் பேசிய அவர் “ மாதம் 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

தமிழகத்தில் பேருந்து கட்டணம், மின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனிடையே மின் கட்டண உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. மேலும் மின் கட்டண உயர்வுக்கு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன..

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டண குறித்து விளக்கமளித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ மின் கட்டண உயர்வுக்கு ஒன்றிய அரசும், முந்தைய அதிமுக அரசும் தான் காரணம்.. கடந்த ஆட்சியில் மின்சாரம் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது ஏன் என தங்கமணி சொல்ல வேண்டும்.. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டும்.. கடந்த ஆட்சியில் 2013-ம் ஆண்டு 33% மின் கட்டணம் உயர்த்தப்பட்டது..” என்று தெரிவித்துள்ளார்..

Maha

Next Post

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

Fri Jul 22 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.37,328-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like