பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த இஸ்லாமியர்கள், 12 மணி நேரத்தில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.
நாகை அவுரி திடலில் பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, நாகூர் பகுதியைச் சேர்ந்த சமது என்பவர் சில இஸ்லாமியர்களோடு பாஜகவில் இணைந்தார். ஆனால், கட்சியில் இணைந்து 12 மணி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அகட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின் காங்கிரசுக்கும் மாறினார். காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு மாறி தற்போது விலகிய நிலையில், தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை திட்டமிட்டு வருகிறார்.
Read More : பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! பரபரப்பை கிளப்பும் த.மா.கா. தேர்தல் அறிக்கை..!!