பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! பரபரப்பை கிளப்பும் த.மா.கா. தேர்தல் அறிக்கை..!!

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதனை தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச்செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, ராஜம் எம்பி நாதன், சக்தி வடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில், ”மழை வெள்ளக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து, தடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தேசிய அளவிலான நதிகளை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் துணை நிற்கும். நமது மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்திடவும் குரல் கொடுக்கும். மேலும், காவிரி மற்றும் பாலாற்றில் மழை வெள்ள காலங்களில் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து தடுப்பணைகள் கட்டி மழை வெள்ள நீரை முறையாக பயன்படுத்த த.மா.கா. குரல் கொடுக்கும்.

சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் குறிப்பாக குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதனை சட்டவடிவமாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு த.மா.கா. உறுதியாக துணை நிற்கும் உள்ளிட்ட 23 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

Read More : Lok Sabha | தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்..!!

Chella

Next Post

கச்சத்தீவு விவகாரம் -வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

Mon Apr 1 , 2024
கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  “1974 ல் இந்தியா – இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க […]
minister jeysankar

You May Like