அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டிலும் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் இணைந்து தான் ஆட்சியமைக்க போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடக்கும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று தான் கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்தார். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று அமித்ஷா கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தான், அதிமுக கூட்டணியில் இருந்து புதிய தமிழகம் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்பதை அடிப்படையாக கொண்டு மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று கூறியுள்ளார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.