fbpx

பெண்கள் சுடுகாட்டிற்கு ஏன் செல்லக்கூடாது.? என்ன காரணம்.?!

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் செய்து வந்த பல பழக்கவழக்கங்கள் இன்று வரை மாறாமல் பின் தொடர்ந்து வருகிறோம். ஆனால் என்ன காரணத்திற்காக இந்த பழக்க வழக்கம் என்பதை குறித்து நம்மில் பலருக்கும் தெரியாது என்பதுதான் உண்மை. 

இப்படி காரணம் தெரியாமல் நாம் இன்று வரை பின் தொடரும் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்பது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை அறியலாம்.

அந்த காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடையாது. இறந்தவருக்கு கொள்ளி போடுபவருக்கு தான் சொத்தில் உரிமை என்ற பழக்கம் இருந்து வந்தது. பெண்களை என்னதான் செல்லமாக வீட்டில் வளர்த்தாலும் அவர்கள் இன்னொருவருடைய மனைவி ஆகப் போகிறவர்கள் என்பதால் பெண்களை சுடுகாட்டிற்கு வரை விடாமலும், கொல்லி போட விடாமலும் தடுத்து வந்தனர்.

மேலும் பெண்கள் எளிதான மனம் படைத்தவர்கள் என்பதால் சுடுகாட்டில் உடல் எரியும் தருணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை பார்த்து பெண்களின் மனம் பாதிக்கும் என்பதாலும் சுடுகாட்டிற்கு செல்ல விடாமல் தடுத்தனர். இந்த காரணங்களினாலேயே பெண்கள் சுடுகாட்டிற்கு செல்லக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

விழா மேடையில் இடம் கொடுக்காத ஆத்திரம்..!! காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!! வெடித்தது புதிய சர்ச்சை..!!

Sat Jan 6 , 2024
பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது. இந்த விழாவில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார். விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையில் இருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார். அப்போது கோபமடைந்த அவர், […]

You May Like