கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு ஆண் தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், “உங்கள் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.” என்று கணவருக்கு உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி அந்த நபர் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக நீதிமன்றத்துக்கு நேற்று பணம் கொண்டு வந்தார்.
அப்போது ரூ.80,000 தொகையை நோட்டாக கொடுக்காமல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக 20 மூட்டைகளில் எடுத்து வந்து நீதிபதி முன்னிலையில் வைத்தார். இதைப் பார்த்து மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியடைந்தது. நாணய மூட்டைகளை பார்த்த நீதிபதி, “நாணயங்களை கையோடு கொண்டு சென்று, நோட்டாக மாற்றி வர வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.. அத்துடன், இந்த வழக்கையும் ஒத்திவைத்தார்.
நீதிபதி இவ்வாறு சொன்னதுமே, அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்த நாணயங்களை, தன்னுடைய காரில் ஒவ்வொன்றாக ஏற்றி வைத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்… பிறகு, 500 ரூபாய் நோட்டுகளாக சேர்த்து, 80,000 ரூபாயை கோர்ட்டில் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு போனார்.. மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்த கணவரால் கோர்ட்டில் இப்படியொரு பரபரப்பு இன்று நடந்துவிட்டது.
Read more : திமுக கூட்டணி கட்சிக்கு, நாடகம் போட தயாராகி விட்ட விசிக திருமாவளவன்…! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு