fbpx

திருச்சி: “சீர்வரிசைக்கு பதிலாக கட்டிய தாலி..” சிக்கிய கடிதம்.! காதலனுடன் கம்பி நீட்டிய மனைவி.! நொந்துபோன கணவர்.!

திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில், கணவனை விட்டுவிட்டு, கணவன் கட்டிய தாலியுடன், காதலனுடன் ஓட்டம் பிடித்தார் அவரது மனைவி. ஆசை மனைவி காணாமல் திகைத்த அந்த கணவர், உண்மையறிந்து நொந்து போனார். இந்த சம்பவம் திருவெறும்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, துவாக்குடி ராவுத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவுக்கும், திருவெறும்பூரில் உள்ள காட்டூர் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரபுவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஜெயபிரபு அதிர்ச்சியுற்றார். வீட்டில் சுகன்யாவைக் காணவில்லை. பல இடங்களிலும் தேடிய ஜெயபிரபு சுகன்யாவின் பாதுகாப்பை நினைத்து அஞ்சினார். பின்னர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட போது, சுகன்யா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில் சுகன்யா, ஜெயபிரபுவை பிடிக்கவில்லை என்றும் தங்கள் வீட்டில் செய்த சீர்வரிசைக்கு பதிலாக ஜெயபிரபு கட்டிய தாலியை எடுத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சுகன்யா, ஏற்கனவே காதலித்து திருமணம் செய்த குமார் என்பவர் உடன் சென்று விட்டதாக காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனால் ஜெயபிரபு மனச்சோர்வு அடைந்தார். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

’அமெரிக்க அதிபருடன் கூட்டணி வைக்கப்போகிறேன்’..!! ’40 தொகுதிகளிலும் போட்டி’..!! சீமான் அதிரடி..!!

Wed Feb 7 , 2024
மக்களவைத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன் என சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் மாநகர், அஸ்தம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜராக வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”ஆதாரம் இல்லாமல் நாம் தமிழர் […]

You May Like