மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கில் குற்றவாளிக்கு பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் நாயக். இவர், திருமணம் செய்துகொண்ட பின் கடந்த 2018ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் சென்னை வந்தார். அவருடன், அவரது 16 வயது மனைவியும், 16 வயது தங்கையும் வந்துள்ளனர். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மனைவியின் தங்கை மீது ராஜ்குமாருக்கு ஆசை வந்துள்ளது.
இதையடுத்து, 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார் ராஜ்குமார். இதுதொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரின் கர்ப்பத்திற்கு ராஜ்குமார் தான் என்பது உறுதியானது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.