பெங்களூர் பகுதியில் உள்ள சோமஷெட்டிஹள்ளியில் தாசேகவுடா (48) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமியுடன்(40) அங்கு இருக்கும் பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். சென்ற மாதம் 28ம் தேதி அன்று கணவரை காணவில்லை என மனைவி காவல்துறையில் புகாரை அளித்துள்ளார்.
இந்த நிலையில் காவல்துறையினர் தாசேகவுடாவை தேடி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் ராம்நகர் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் சாக்கடை ஒன்றில் தாசேகவுடா பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்பத்தினரிடம் விசாரித்ததில், மனைவி ஜெயலட்சுமி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவம் வெளிப்பட்டது.
விசாரணையில் மனைவி ஜெயலட்சுமிக்கும், அவரது நண்பர் ராஜேசுக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.இதனை கணவர் கண்டித்து கேட்டதால் அவரை கடந்த, 27ம் தேதி இரவு, பண்ணை வீட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை, ராம்நகர் அருகே இருக்கும் சாக்கடையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை கணவரை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவி, கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.