fbpx

கள்ளக் காதலை தட்டிக்கேட்ட கணவன்! கட்டிப் போட்டு சித்ரவதை செய்த மனைவி.. நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவர் தான் இந்த வீடியோவில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அந்தப் பெண். மெஹரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் பழகிய அவருடன் நெருக்கமாக பழக தொடங்கி இருக்கிறார் மெஹர். அது ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் அந்த பெண்ணை கண்டித்து இருக்கிறார் ஆனாலும் அதனை கேட்காத மெஹர் ஜஹான் தொடர்ந்து அந்த இளைஞர் உடனான கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார்.

இது தொடர்பாக பலமுறை இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரவு தூங்கி எழுந்த பின் தன் உடலில் காயமாகவும் மிகவும் களைப்பாகவும் இருப்பதை உணர்ந்த அந்த இளைஞர் தன்னை தனது மனைவி ஏதோ செய்கிறார் என உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டின் படுக்கை அறையில் கேமரா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பாலில் போதை மருந்தை கலந்து கொடுத்து கணவரை மயக்கமடைய செய்த மெஹர் ஜஹான் அவரது கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக தாக்கி இருக்கிறார். மேலும் ஒரு சைக்கோவை போல சிகரெட் புகைத்துக் கொண்டு அவரது மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். கொடூரத்தின் உச்சமாக அவரது பிறப்புறுப்பை கத்தியால் கீரி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் கணவன் ஒப்படைத்தார். இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

"சிறுநீர் கற்களை கரைக்க தினமும் 2 லிட்டர் சிறுநீர் அருந்த வேண்டும்" AI பதிலால் இணையத்தில் சர்ச்சை!

Tue May 7 , 2024
கூகுளில் தேடப்படும் ஒரு சில விஷயங்களுக்கான பதில்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் AI தொழில்நுட்பம் பதில் கூறி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் கூகுளில் உபயோகப்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது அப்பதிவில் கூகுளிடம் சிறுநீரக கற்களை எளிதாக வெளியேற்றுவது எப்படி என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த தொழில்நுட்பம் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை அதிகமாக அருந்த வேண்டும் என்று கூறியதோடு, தினமும் 2 […]

You May Like