fbpx

முகவரியை புதுப்பித்தால் ஆதார் எண் மாறுமா..? என்ன செய்ய வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

ஆதார் அட்டை என்பது 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். அரசாங்க சேவைகள் மற்றும் பலன்களை அணுகுதல், வங்கிக் கணக்குகளை தொடங்குதல் மற்றும் மொபைல் ஃபோன் சிம் கார்டைப் பெறுதல் போன்ற அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் தேவைப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் தரவுத்தளத்தை பராமரிப்பதற்கும் ஆதார் எண்களை வழங்குவதற்கும் பொறுப்பாகும்.

ஆதாரில் உள்ள விவரங்கள் (பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி) மற்றும் பயோமெட்ரிக்ஸ் (கைரேகைகள், கருவிழிகள் & புகைப்படம்) ஆகியவற்றை நீங்கள் புதுப்பிக்கலாம். அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று நீங்கள் ஆதார் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும். மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியைப் புதுப்பித்த பிறகு உங்கள் ஆதார் எண் எப்போதும் அப்படியே இருக்கும்.

இந்திய குடிமக்களின் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஆதார் காணாமல் போய்விட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். UIDAI எனும் ஆன்லைன் தளம், தனிநபர்கள் தங்கள் ஆதார் எண்ணை மீட்டெடுக்கவும், அவர்களின் ஆதார் அட்டையின் நகலை டவுன்லோடு செய்யவும் உதவுகிறது.

ஆதார் அட்டையை மீட்டெடுக்கும் வழிகள்

* https://uidai.gov.in அல்லது https://resident.uidai.gov.in என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், “ஆதார் அட்டையை ஆர்டர் செய்” சேவைக்குச் செல்ல வேண்டும்.

* பின்னர், 12 இலக்க அடையாள எண், 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் அல்லது 28 இலக்க பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

* திரையில் காட்டப்படும் விவரங்களையும், பாதுகாப்புக் குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.

* பின்னர், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணைப் பெறுவீர்கள்.

* மீண்டும் UIDAI சுய சேவை போர்ட்டலுக்குச் சென்று “ஆதாரைப் பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

Chella

Next Post

கேளம்பாக்கம் அருகே பழிக்கு பழியாக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர்…! வெளியான அதிர்ச்சி பின்னணி….!

Tue Sep 5 , 2023
கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர், கடைவீதியில், பட்ட பகலில், கொடூரமான முறையில், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேளம்பாக்கம் அடுத்துள்ள, புதுப்பாக்கம் கிராமத்தில், இருக்கின்ற ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சுகன்யா (38) என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் வெங்கடேசன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. வெங்கடேசன் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் […]

You May Like