fbpx

நல்ல முடிவை எடுப்பார்களா ஐஸ்வர்யா-தனுஷ் ஜோடி ?

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தங்கள் பிரிவை அறிவித்து 9 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விவாகரத்தை ரத்து செய்வது பற்றி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஜனவரி மாதம் சமூக வலைத்தலங்களில் வெளியிட்ட பதிவில் நாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிய முடிவு எடுத்துள்ளோம் கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாக , தம்பதிகளாக , பெற்றோர்களாக , நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி , புரிதல், அனுசரிப்பு இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு இடத்தில் நிற்கின்றோம் நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். என முக நூல் , டுவிட்டர் , இஸ்டாகிராம்களில் பதிவிட்டனர். இந்த தகவல் திரையுலகை மட்டுமின்றி ரசிகர்களையும் இணைய உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கணவரைப் பிரிந்த நிலையில் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் தனித்தனியே நேரம் செலவிட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பள்ளி விழா ஒன்றில் தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்ற காட்சிகள் வெளியானது. எனவே மீண்டும் இணைந்துவிட்டார்கள் என பேசப்பட்டு வந்தது.

ஆனால் அது பள்ளி நிகழ்ச்சிக்காக மட்டுமே என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர் தனுஷ் உடன் சேர்த்து வைக்க பல கட்டமுயற்சிகளை மேற்கொண்டனர். நண்பர்கள் , உறவினர்களும் பல முறை இருவரையும் இணைக்க முயற்சி செய்தனர். இதனிடையே வேறொரு நபரை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சில தகவல்கள் வெளியாகின்றது. தங்கள் விவாகரத்து முடிவை ரத்து செய்துவிட்டு மீண்டும் இணைய உள்ளதாக திரை உலகில் பேசப்பட்டு வருகின்றது. விரைவில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

Next Post

இந்தியாவின் முதல் ஆளில்லா ட்ரோன் … 130 கிலோ மனிதனை தூக்கிக் கொண்டு பறக்கும்…

Wed Oct 5 , 2022
புனேவில் சாகர் டிஃபென்ஸ் பொறியியல் தனியார் நிறுவனம் ’’வருணா ’’ என்ற மனிதரை ஏற்றிச் செல்லும் நாட்டின் முதல் ஆளில்லா ட்ரோன் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ட்ரோன் விமானத்தின் சோதனை நிக்ச்சி நடைபெற்றது. இதில் ஆளில்லாத ட்ரோன் மனிதனை தானாக ஏற்றிக்கொண்டு பறக்கும் காட்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சாக்கன் தளமான சாகர் தற்காப்பு பொறியியல் தனியார் நிறுவனம் இந்த வருணாவை விரைவில் இந்திய நேவி படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

You May Like