fbpx

2024இல் இந்த விஷயம் எல்லாம் நடக்கப்போகுதா..? அடடே அதிலும் ஒரு குட் நியூஸ்..!! பாபா வங்காவின் கணிப்பு..!!

2024ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த இவர், சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.

இவர், பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா, கடந்த 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார். பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.

குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கருப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன. இதனால், உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றது போல் ரஷ்ய – உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது. அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தது. ​

இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்க தரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024இல் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணித்துள்ளார்.

2024இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் கணிப்பில் 85 சதவீதம் சரியாக நடக்கும் என்பது சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

Wed Nov 29 , 2023
இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் வேலையிழப்பு, சம்பள குறைப்பு எனக் கடும் நெருக்கடியை மக்கள் சந்தித்தனர். அப்போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தனிநபர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கியது. 2013இல் கொண்டுவரப்பட்ட தேசிய […]

You May Like