fbpx

’ஆத்தாடி மறுபடியுமா’..? ’மக்களே மட்டனில் கலக்கப்படும் பூனைக்கறி’..!! ’இனி உஷாரா பாத்து வாங்குங்க’..!!

சென்னையில் மட்டனுடன் பூனைக்கறியை மிக்ஸ் செய்து விற்பனை செய்யப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே சிலர் பூனைகளைப் பிடித்து வலையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சவுகார்பேட்டை விலங்குகள் நல ஆர்வலர் புஷ்பராணி, இதுகுறித்து ஏழுகிணறு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், பூனைகளை வைத்திருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 11 பூனைகளைத் திருவள்ளூரில் இயங்கி வரும் விலங்கு நலப் பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலும் விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது பல வீடுகளில் ஆசையாக வளர்க்கப்படும் பூனைகளை உரிமையாளர்களே தெரியாமல் வலை வைத்து பிடிப்பதே இந்த இருவரின் வேலை.. பூனைகளைப் பிடிக்கும் இவர்கள், அதைக் கொன்று தோலை உரித்து மட்டன் இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்துவிடுவார்களாம்.

’ஆத்தாடி மறுபடியுமா’..? ’மக்களே மட்டனில் கலக்கப்படும் பூனைக்கறி’..!! ’இனி உஷாரா பாத்து வாங்குங்க’..!!

அயனாவரம், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகளில் குறைந்த விலைக்கு இவர்கள் பூனை இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். அதேபோல், பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தையிலும் இவர்கள் அதிகம் விற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வாங்கும் பூனை கறியை மட்டனுடன் மிக்ஸ் செய்து கோலா உருண்டை, மட்டன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளனர். பூனை இறைச்சியும் மட்டன் கறியும் கிட்டதட்ட ஒரே பதத்தில் இருப்பதால் மட்டனுடன் பூனை இறைச்சியை மிக்ஸ் செய்யும் போது, அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாகி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், இதேபோல சென்னையில் பல்லாவரத்தில் பூனை கறி விற்கப்படுவது கண்டறியப்பட்டது. தற்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது வெயில் காலம் நெருங்கும் நிலையில், பலரும் சிக்கன் சூடு என்பதால் மட்டனையே சாப்பிட விரும்புகிறார்கள். வெளியே செல்லும்போதும் மட்டனையே சாப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில் இப்படி பூனை இறைச்சியும் மட்டனும் கலைப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Chella

Next Post

அவர் ஒரு பச்சோந்தி…..! மின்துறை அமைச்சரை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி……!

Sat Feb 25 , 2023
ஈரோடு இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே பாக்கி இருப்பதால் இன்று கடைசி நாள் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்கள் தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது நான் […]

You May Like