fbpx

“காங்கிரஸ், ஆம் ஆத்மியின் I.N.D.I.A கூட்டணி தலைநகரில் MODI மேஜிக்கை தடுக்குமா.?” – கடந்த தேர்தல்களின் முழு விவரம்.!

MODI: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  தேசிய தலைநகரில்  காங்கிரஸ் கட்சிக்கு மூன்று நாடாளுமன்ற இடங்களை விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியும்  வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைநகர் டெல்லியில் இணைந்து போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும் போட்டியிட இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டு கட்சிகளும் சரியான மற்றும் குஜராத் மாநிலங்களில் இணைந்து போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

கடந்த 2019 ஆம் வருட தேர்தலில் டெல்லி பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் 56.86 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் மொத்த வாக்குப் பங்கான 40.83 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால். டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் இரு கட்சிகளையும் விட பாஜக முன்னிலை வகித்தது. 2014 ஆம் வருட தேர்தலை விட 2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 10 சதவீத அதிகமாக்களை பெற்றிருக்கிறது. ஆனால் ஆம் ஆத்மி கட்சி 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் 15 சதவீத வாக்குகளை இழந்திருக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவிகிதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 2014 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிட்டன. பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் மொத்தமாக உள்ள 7 இடங்களையும் 46.63% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் 2019 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்து இருக்கிறது. டெல்லியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக 49,08,541 வாக்குகளை பெற்றுள்ளது . ஆனால் காங்கிரஸ் கட்சி 19,53,900 வாக்குகளையும் ஆம் ஆத்மி 15,71,687 வாக்குகளையும் பெற்றுள்ளன . இரண்டு கட்சிகளின் வாக்கு எண்ணிக்கையும் பாரதிய ஜனதா கட்சியை விட 13,82,954 வாக்குகள் பின்தங்கியே இருக்கிறது. இந்த முறையாவது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி மோடி(MODI) அலையை வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English Summary: Aam Admi party and congress will contest in Delhi together. Will they stop Modi’s Magic at the capital.?

Read More:அக்பர், SITA பெயர்களை மாற்ற மாநில அரசுக்கு உத்தரவு.! “வன விலங்குகளுக்கு மத பெயர்கள் வேண்டாம்” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவுரை.!

Next Post

எடப்பாடியார் அழைக்கிறார்.! விவசாயிகளுக்காக போராட்ட களத்தில் அதிமுக.! பிப். 29 தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

Thu Feb 22 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சினைக்கான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் பயணித்த அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து அந்த கட்சியுடன் முடித்துக் கொண்டது. இனி எப்போதும் பாஜக […]

You May Like