அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மூலமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பல ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், அரிசி மற்றும் கோதுமை தட்டுப்பாட்டின் காரணமாக, எல்லா மாநிலங்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் 20 கிலோ வரையிலும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20,000 மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுவதாக தமிழக அரசு சார்பாக இந்திய உணவுக் கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் கர்நாடக மாநிலத்திலும் 2.8 லட்சம் டன் அரிசி தேவைப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், மத்திய அரசு அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. மாநில அரசுக்கு தேவைக்கு ஏற்றவாறு சந்தைகளில் இருந்து அரிசி நேரடியாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்திய உணவு கழகம் தெரிவித்து இருக்கிறது. ஆகவே எதிர்வரும் நாட்களில் தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.