ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் முதல் நாளில் மட்டும் 31 கோடி வரை வசூலித்தது.
அஜித் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக குட் பேட் அக்லி அமைந்தது. அதனைத்தொடர்ந்து இப்படம் வெளியாகி இன்றுடன் எட்டு நாட்கள் ஆகின்றன. இந்த எட்டு நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 208 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
அஜித் ரசிகர்கள் சிலர் குட் பேட் அக்லி பட வசூலை விஜய்யின் கடைசி படமான GOAT படத்தின் வசூலுடன் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். எப்படியாவது GOAT வசூலை குட் பேட் அக்லி தாண்டவேண்டும் என்பது தான் சில அஜித் ரசிகர்களின் குறிக்கோளாக உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் தான் GOAT. விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இப்படம் அமைந்தது.