2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புழக்கத்தில் விடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக வங்கிகளில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியால் 10,20,50,100, 200, 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன.
நம்மில் பலருக்கு ஏடிஎம் -ல் பணம் எடுக்கும்போது வரும் பழைய நோட்டுகள் செல்லுமா செல்லாத என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். இதே போல், சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட ரூ.500 நோட்டு போலியானது என்று ஒரு செய்தி வைரல் ஆனது. 500 ரூபாய் நோட்டில் பச்சை ஸ்ட்ரிப் ஆளுநரின் கையெழுத்துக்கு அருகில் இல்லாமல் காந்தியடிகளின் புகைப்படத்துக்கு அருகில் இருக்கும் நோட்டுகள் போலியானது என்ற செய்தி வளம் வந்தது. இந்த செய்தி ஒரு போலியான செய்தி என்பதை உறுதிபடுத்திய PIB, இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ட்வீட் செய்தது. மேலும் இது குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதனால் அசல் மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.
எந்த மாதிரியான நோட்டுக்கள் செல்லாது?
- பேனாவின் மை நோட்டில் தெளிக்கப்பட்டிருநால் அது செல்லாது.
- நோட்டில் டேப், க்ளூ போன்ற விஷயங்கள் இருந்தால், அத்தகைய நோட்டு செல்லாத நோட்டாக கருதப்படும்.
- விளிம்பிலிருந்து மையம் வரை கிழிந்த நோட்டுகள் செல்லாது.
- 8 சதுர மில்லிமீட்டருக்கும் அதிகமான துளைகளைக் கொண்ட நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.
- பல நேரங்களில், நோட்டுகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், நோட்டுகள் தளர்வாக மாறும். அத்தகைய நோட்டுகள் செல்லாது.
- நோட்டில் ஏதேனும் கிராஃபிக் மாற்றம் இருந்தால் அவை செல்லாது.
- நோட்டின் நிறம் மங்கினால், அது செல்லாது.
- நோட்டின் நிறம் மாறி இருந்தால், அத்தகைய நோட்டுகளும் செல்லாததாக கருதப்படும்.
9.நோட்டுகள் மிகவும் அழுக்காகி, அவற்றில் அதிக மண் படிந்து இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.
உங்களிடம் பழைய அல்லது மேலே குறிப்பிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் ஏதேனும் இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் வங்கிகளில், அத்தகைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் புதிய விதியில் கூறப்பட்டுள்ளது. மேலும் நோட்டுக்களை வங்கியில் மாற்ற செல்லும்போது வங்கி ஊழியர்கள் உங்கள் நோட்டை மாற்ற மறுத்தால், நீங்கள் அதைப் பற்றி புகார் செய்யலாம்.
கிழிந்த நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அல்லது நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாய் கிழியப்பட்டு ஒட்டப்பட்டிருந்தாலோ, அதில் எந்த முக்கிய பகுதியும் காணாமல் போகாமல் இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கிழிந்த ரூபாய் நோட்டுகளில் சிறப்பு பகுதிகள் என குறிப்பிடப்படும், வெளியிடும் அதிகாரத்தின் பெயர், உத்தரவாதம் மற்றும் உறுதிமொழி விதி, கையொப்பம், அசோகத் தூண், மகாத்மா காந்தியின் படம், வாட்டர் மார்க் போன்றவையும் நோட்டில் இல்லை என்றால், அவை மாற்றப்படாது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாய் கிழியப்பட்டு நோட்டுக்கள் ஒட்டப்பட்டிருந்தால், அதில் சிறப்பு பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள மேல் கொடுக்க பட்ட பகுதிகள் இருக்கும் பட்சத்தில் அந்த நோட்டை மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
வீட்டில் தீ பிடிக்கும்போது எறிந்த ரூபாய் நோட்டுகள், அல்லது வேறு சில காரணங்களால் தீயில் எரிக்கப்பட்ட நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால் அவைகளை வங்கியில் வாங்க மாட்டார்கள், ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்தில் தான் கொடுக்க வேண்டும் , அங்கு தான் நோட்டின் உண்மை தண்மை குறித்து கண்டறிந்து சரிபார்க்கப்படும்.