தமிழ்நாட்டில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டதை எதிற்கும் விதமாக, அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அதன் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதோடு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் நிர்வாக காரணங்களுக்காக அவருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்த மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட 2️ துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காவாக ஒதுக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு செந்தில் பாலாஜியை இல்லாத அமைச்சராக நியமனம் செய்து அரசாணை ஒன்றை வெளியிட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களுக்கு துளியும் விருப்பமில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் தமிழக அரசு செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, அதிமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்ந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதற்கு நடுவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், காவிரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.