fbpx

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு மே மாதம் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தொடர்ந்து ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அன்றைய தினமே அவர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் நிலையில், இதனால் சுமார் 9 மாதங்களாக அவர் சிறையிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை அவர் ஜாமீன் கோரி பல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், அதில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். இது தொடர்பாகவும் நீதிமன்றம் சில கருத்துகளைக் கூறியிருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான், மீண்டும் ஜாமீன் கோரி அவர் உச்சநீதிமன்றத்திற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா..? என்பது தெரியவரும்.

Read More : தேர்தலில் வைக்கப்படும் அழியாத மை..!! 10 மில்லி கிராமின் விலை எவ்வளவு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

Chella

Next Post

Lok Sabha | திடீரென மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறிய பிரேமலதா..!! என்ன காரணம்..?

Mon Apr 1 , 2024
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாணாபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். மேடையில் அதிமுக வேட்பாளர் குமரகுரு, தேமுதிக பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பேசும்போது நா தழுதழுத்து பேசினார். அதேபோல் அவர் பேசியதை மேடையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் குமரகுரு […]

You May Like