fbpx

மக்களே…! சொந்த வீடு வாங்கினால் பதிவு கட்டணம் உயர்வா…? உண்மை என்ன…? முழு விவரம் இதோ…

இது குறித்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரத்துக்கு 7% முத்திரை தீர்வை, 2% பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கட்டுமான ஒப்பந்தத்துக்கு, 1% முத்திரை தீர்வை, 3% பதிவு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். பணிகள் முடிந்த வீடுகளில், யு.டி.எஸ், பத்திரத்தில் கட்டடத்தின் பரப்பளவையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.

பணிகள் முடிந்த திட்டங்களில் யு.டி.எஸ்., பத்திரத்தில், கட்டட பரப்பளவை, மதிப்பை குறிப்பிட வற்புறுத்த வேண்டாம் என்று, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன்படி, கட்டுமான பணிகள் முடிந்த திட்டங்களில் தனியாக கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யாமல் ஒரே கிரைய பத்திரமாக, வீட்டை பதிவு செய்ய வேண்டும்.

பணிகள் முடிக்கப்படாத திட்டங்களில் ஏற்கனவே இருந்தபடி, யு.டி.எஸ்., பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்யும் நடைமுறை அப்படியே தொடரும். இதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனைக்கான பதிவு கட்டணம், எந்த விதத்திலும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

TANGEDCO | சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்..! முழு விவரம்....

Wed Aug 9 , 2023
சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். இதுதொடர்பாக இன்று(ஆகஸ்ட்-9) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திகுறிப்பில், சென்னையில் 09.08.2023 இன்று காலை 9 மணி […]

You May Like