இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்தியாவின் தகுதியான மக்கள்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கொரோனாவின் 4-வது அலை ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் கொரோனா 4-வது அலை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.. கொரோனா 4வது அலைக்கான வாய்ப்பு பல காரணிகளைப் பொறுத்தது என்றும், தற்போதைய கொரோனா பரவல் எதிர்ப்புத் திறன் கொண்ட மாறுபாடுகளாக மாறினால், 4வது அலை உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரபல டாக்டர் ஷுச்சின் பஜாஜ் “ கொரோனாவின் 4வது அலைக்கான சாத்தியம் தடுப்பூசி விகிதங்கள், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் மாறுபாடுகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. புதிய மாறுபாடுகள் உருவாகும் அபாயம் உள்ளது, அவை தற்போதைய தடுப்பூசிகளுக்கு அதிக பரவக்கூடிய அல்லது எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கலாம்.. எவ்வாறாயினும், பரவலான தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற தொடர்ச்சியான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் கொரோனா நான்காவது அலையின் அபாயத்தைத் தணிக்க முடியும்.. நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதும், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுவதும் முக்கியம்” என்று தெரிவித்தார்..
நாட்டின் முன்னணி மருத்துவமனையின் பிரபல மருத்துவர் சஞ்சய் தால் இதுகுறித்து பேசிய போது “ கொரோனாவின் 4வது அலை சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது.. முதலாவதாக, பூஸ்டர் டோஸ் இல்லாவிட்டாலும், நம்மில் பெரும்பாலோர் இரண்டு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்தி உள்ளோம்.. இரண்டாவதாக, பலருக்கு ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மூன்றாவதாக, புதிய மாறுபாடுகள் காரணமாக கடுமையான நோய், இறப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க நாம் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..
டாக்டர் அனுராக் சக்சேனா இதுகுறித்து பேசிய போது “பலர் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும், சமீபத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து கவலைப்படுவதற்கு காரணம் உள்ளது. தடுப்பூசிகள் தீவிர நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவை தொற்று அல்லது பரவும் அபாயத்தைக் குறைப்பதில் முற்றிலும் பயனுள்ளதாக இல்லை..
இதன் விளைவாக, கொரோனா பரவல் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இன்னும் உள்ளது, குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்கள் உள்ள இடங்களில் அல்லது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிவது மற்றும் மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை வைத்திருப்பது போன்ற பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றாத இடங்களில் அதிக பரவல் ஏற்படலாம்.. இதை தடுக்க, பொது சுகாதார பரிந்துரைகளை அனைவரும் தொடர்ந்து கடைப்பிடிப்பதும், நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதும் மிகவும் முக்கியமானது..” என்று தெரிவித்தார்..