சுற்றுலாக் கொள்கையை வடிவமைக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், வரைவு தேசிய சுற்றுலாக் கொள்கையை உருவாக்குவதில் மத்திய சுற்றுலா அமைச்சகம் முன்பு முயற்சியை மேற்கொண்டது. காலப்போக்கில் வரைவு கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அம்சங்கள், நடவடிக்கைகள் அனைத்து திட்டங்களிலும் வழிகாட்டுதல் நடைமுறைகளிலும் பொருத்தமான முறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அனைத்து தரப்பினருடனும் சுற்றுலா அமைச்சகம் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தனியான சுற்றுலாக் கொள்கையை வடிவமைக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள், தொழில்துறை போட்டித்திறன், திறன் மேம்பாடு, சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலைத்தன்மை போன்ற அம்சங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற மத்திய அமைச்சகங்கள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் உள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தப் பல்வேறு தரப்பினருடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் இணைந்து பணியாற்றி வருகிறது. இது துறைவாரியான வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த மத்திய அரசின் அணுகுமுறையை உறுதி செய்கிறது.
தற்போதைய நிலையில், பிரத்யேக கொள்கை ஆவணத்தை உருவாக்குவதை விட, இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்தி திறம்பட செயல்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. சுற்றுலாத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்