fbpx

தீபாவளிக்கு இந்த முறையும் கரண்ட் இருக்காதா..? மக்கள் சந்தேகத்திற்கு மத்திய அரசு விளக்கம்..!

நிலக்கரி பற்றாக்குறையால் இந்த ஆண்டும் தீபாவளி அன்று மின்தடை ஏற்படுமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான். கடந்த ஆண்டு பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் கடுமையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை தான். இந்நிலையில், இந்த ஆண்டும் பண்டிகை காலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

தீபாவளிக்கு இந்த முறையும் கரண்ட் இருக்காதா..? மக்கள் சந்தேகத்திற்கு மத்திய அரசு விளக்கம்..!

இந்நிலையில், இதுகுறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சர் அலோக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 20 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை நினைவில் கொண்டு, இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

Fri Sep 16 , 2022
பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங், வரும் 19ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அமரீந்தர் சிங், இரு முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015ஆம் […]
பாஜகவில் இணைகிறார் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..! திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?

You May Like