fbpx

விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுத்தால் இத்தனை பிரச்சனைகள் வருமா..? மீண்டும் இடமாற்றமா..?

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனக்கான செல்வாக்கை பறைசாற்ற அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு என பல்வேறு இடங்களை பரிசீலித்த பிறகு, இறுதியாக விக்கிரவாண்டியை தேர்வு செய்திருக்கிறார். அங்கு வி.சாலை என்ற இடத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான அனுமதி கோரி, புஸ்ஸி ஆனந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் எஸ்.பி. அலுவலகத்திலும் மனு அளித்திருந்தார்.

வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே 5 ஏக்கர் நிலம், மாநாட்டுக்கு வந்து செல்ல 3 வழிகள், உணவு, குடிநீர், கழிவறை, ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் செய்து தர திட்டமிட்டிருக்கிறார்கள் நிர்வாகிகள். மாநாட்டுப் பகுதியில் காவல்துறையின் பாதுகாப்பும், தீயணைப்புத்துறையின் ஒத்துழைப்பும் வேண்டும் என்று கோரியுள்ளனர். மாநாட்டுக்கு தேர்வாகியுள்ள இடம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிகவும் அருகிலேயே 300 மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிப்பதாகத் என தெரிகிறது.

ஏற்கனவே 2014இல் தேசிய நெடுஞ்சாலை அருகே உளுந்தூர்பேட்டை – எறஞ்சி என்ற இடத்தில், தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போதும் இதே நிலை நேரிடக்கூடும் என்பதால், அனுமதி மறுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாநாட்டுக்காக தேர்வாகியுள்ள பகுதியில் சுமார் 10 கிணறுகள் இருப்பதால், இதுவும் காவல்துறையின் தயக்கத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய் விரும்பியபடி முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்குமா? என்பது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கையில் தான் உள்ளது.

Read More : கள்ளக்காதலியுடன் சேர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை..!! அதிர்ந்துபோன சென்னை..!! மனைவிக்கு நேர்ந்த சோகம்..!!

English Summary

Will the first conference be held in Vikravandi as Vijay wanted? It is in the hands of Villupuram District Superintendent of Police.

Chella

Next Post

பெரும் சோகம்..!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெண் விஞ்ஞானி உயிரிழப்பு..!! தந்தையை தேடும் பணி தீவிரம்..!!

Mon Sep 2 , 2024
Ashwini, a young scientist who was traveling by car from the Hyderabad airport, was swept away by the flood and died.

You May Like