குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்கு எண்ணிக்கையில் 64 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக முர்மு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நான்கு சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரெளபதி முர்மு 2,824 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1,877 வாக்குகள் பெற்றுள்ளார். விழுக்காடு அடிப்படையில், திரெளபதி முர்மு 64.03 விழுக்காடு வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்க உள்ளார். இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, 15 எம்.பி.க்கள் உட்பட 53 வாக்காளர்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார். இதன் மூலம், நாட்டின் 15-வது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்கவுள்ளார்.
வரலாற்றில் 1.3 பில்லியன் இந்தியர்கள் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் நேரத்தில், கிழக்கு இந்தியாவின் தொலைதூரப் பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் மகள் நமது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதே போல தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரெளபதி முர்முவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளர்.