fbpx

கொண்டாட்டத்திற்கே ரூ.1200 கோடி செலவு செய்த அம்பானி!! திருமணத்திற்கு எவ்வளவு தெரியுமா? இந்த ஆண்டின் ஆடம்பர திருமணம் இதுதான்!

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக மாற்றினர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாக்கள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த தொடர் மார்ச் முதல் வாரத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவுடன் தொடங்கியது ஜாம்நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய விழாவில் இந்தியா மற்றும் உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மோர்கன் ஸ்டான்லி தலைமை நிர்வாக அதிகாரி டெட் பிக், வால்ட் டிஸ்னி தலைவர் பாப் இகர், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என பலர் கலந்துகொண்டனர்.

இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிரமல், மற்றும் கோகிலாபென் அம்பானி உட்பட ஒட்டுமொத்த அம்பானி குடும்பத்தினரும் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பிரபல பாடாகி ரிஹானா கலந்து கொண்டு பாடல்களை பாடினார். அவருக்கு இதற்கு சுமார் ரூ. 52 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் 3 நாள் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களுக்கு ரூ. 1260 கோடி வரை செலவானது என்றும், கேட்டரிங் ஒப்பந்தத்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தனியார் சொகுசு கப்பலின் நடைபெற்ற கொண்டாட்டத்தின் செலவு மட்டுமே சுமார் 500 கோடியாம்.

இந்த நிலையில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு 1200-1500 கோடி ரூபாய் செலவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவில் நடைபெறக்கூடிய மிக ஆடம்பரமான திருமணமாக இது இருக்கப் போகிறது.

Read more | ‘உணவின் ருசி இதில் தான் இருக்கிறது!!’ ஆய்வாளர்கள் கூறும் சுவாரஸ்ய தகவல் இதோ..

English Summary

With the Ambani family spending over Rs 1200 crores on Anant Ambani’s pre-wedding celebrations, speculations are rife as to how much Mukesh Ambani and Nita Ambani will spend on their youngest son’s wedding.

Next Post

”இதுக்கும் மேல அவரு நடிச்சி என்னத்த”..!! ரஜினியை விளாசி தள்ளிய இயக்குநர் பிரவீன் காந்தி..!!

Tue Jul 2 , 2024
Superstar Rajinikanth Kuttu famous director Praveen Gandhi has spoken.

You May Like