கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்துள்ள விலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவருடைய மனைவி கீதா, ஹரிஹரன் என்பவருடன் திருமணத்தை கடந்த முறை தவறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கீதாவின் மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரிய வந்துள்ளது இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் வருடம் இருவரையும் கீதா முள்ளங்கி சாம்பார் விஷம் வைத்து கொலை செய்திருக்கிறார். அப்போது அந்த விஷம் கலந்த சாம்பாரை தெரியாமல் வாங்கி சாப்பிட்ட அண்டை வீட்டு சிறுவன் நிதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த மங்களம் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் சென்ற போது அவரிடம் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியது.
அப்போது தன்னுடைய கள்ளக்காதலனான ஹரிஹரனுடன் இணைந்து தான் கீதா இந்த கொலைகளை செய்தார் என்பது தெரிய வந்தது. ஆகவே இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.