அதிக மொபைல் போன் நுகர்வினால் எந்த புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி ஆனந்தமடைவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பல் விளக்குவதை வீடியோ எடுப்பது வரை, உணவினை ஆர்டர் செய்வது முதல் உடற்பயிற்சி செயலி வரை, பணம் எடுப்பது முதல் பள்ளிப் பாடங்களை கற்பது இன்று மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்குவதே இல்லை.
சமீப காலமாக, மக்களிடையே ரீல்ஸ் மோகம் பெருகி விட்டது. சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் இது போன்ற அம்சங்கள் இருப்பதால், இதன் பார்வையாளர்கள் அதிகரித்து விட்டனர். அந்த வகையில், ரீல்ஸுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் பலர் செய்யும் ஒவ்வொரு காரியமும் எரிச்சல் ஏற்படுத்துவதாகவும், அருவருக்கத் தக்கதாகவும் உள்ளது. இன்னும் சொல்லப் போனால், ரீல்ஸ் மோகத்தால் உயிரிழப்புகள் கூட அதிகம் ஏற்படுகிறது.
அந்த வகையில் தற்போது மணி என்ற பெண் ஒருவர், ரீல்ஸ் வீடியோ எடுத்து லைக்ஸ் வாங்குவதற்காக செய்த காரியம் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆம், அந்த வீடியோவில், அவர் நாயின் மார்பிலிருந்து பால் குடித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். கேவலம் ஒரு லைக் வாங்குவதற்காக, இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவீர்களா என்று கேள்வி எழுப்பியும், உனக்கு கட்டாயம் ரேபிஸ் நோய் வந்துவிடும் என்று விமர்சித்து வருகின்றனர்.
Read more: “பூஜை செய்ய வந்த இடத்தில், பூசாரி செய்த வேலை”; வெளுத்து வாங்கிய பக்தர்கள்..