fbpx

வீட்டில் கணவன் இல்லாத போது, மாமனாரின் செயலால், குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். ஜேசிபி டிரைவராக வேலை செய்து வரும் இவருக்கு 26 வயதான தங்கமணி என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பணப்பிரச்சனை காரணமாக நேற்று தங்கமணியின் மாமனார் தங்கமணியை துன்புறுத்தியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த தங்கமணி, தனது மூத்த மகளை வீட்டில் வைத்து விட்டு, 3 வது மகளான ரித்திகா, ஒன்றரை வயது மகன் லஜித் ஆகியோருடன் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், தங்கமணி மற்றும் அவரது குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் வீட்டின் அருகில் உள்ள கிணறு ஒன்றில் தங்கமணியின் காலணி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சமபவ் இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும், கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர தேடுதலுக்கு பின் தங்கமணி மற்றும் அவரது மகன் லஜித் ஆகியோரின் உடல்களை மீட்டனர். அப்போது தான், தங்கமணி துண்டால் தனது உடலில் குழந்தைகளை கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தது தெரியவந்துள்ளது. சுமார், ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், தீயணைப்பு துறையினர் மகள் ரித்திகாவின் உடலை மீட்டனர். இதையடுத்து, மீட்கப்பட்ட 3 உடல்களையும் மணப்பாறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கணவன் வெளியூரில் இருந்த நிலையில், மாமனார் – மாமியார் துன்றுபுறுத்தலால் தங்கமணி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகின்றது. இதையடுத்து, போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Maha

Next Post

"என்னால ஒருத்தரை தான் திருமணம் செய்ய முடியும்" காதலிகள் தொல்லையால் வாலிபர் செய்த காரியம்..

Sun Oct 8 , 2023
பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ். தனியார் நிறுவன ஊழியரான இவர், அதே நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த சமயத்தில், அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு பெண்ணுடன் சந்தோசுக்கு காதல் […]

You May Like