fbpx

“என்னோட புருஷன் ஆம்பளையே இல்ல சார்” காவல் நிலையத்தில் பெண் அளித்த பரபரப்பு புகார்..

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், நவீன் என்ற நபர் ஒருவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை நவீன் அவரது மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை. மனைவியே வாய் திறந்து கேட்டாலும், நவீன் உடலுறவு வைத்து கொள்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அவரது மனைவி, இது குறித்து நவீனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு உடல் நலப் பிரச்னை என்றும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி இப்படி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்தப் பெண் சமீபத்தில் சந்தை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் நவீன், சேலை அணிந்து, கையில் வளையல் அணிந்து பிச்சை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர் அளித்த புகாரில், “என்னை ஏமாற்றி நவீன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் ஆண் இல்லை. பல லட்சம் ரூபாய் வரதட்சனையை பெற்றுக்கொண்டு, 4 வருடங்களாக நவீன் ஏமாற்றி விட்டார். அது மட்டும் இல்லாமல், எனக்கு உணவு கொடுக்காமல் குடும்பத்துடன் அடித்து, வரதட்சனை கேட்டு துன்புறுத்தினர்” என கூறியுள்ளார்.

இது குறித்து நவீனிடம் விசாரித்த போது, “தனது தொழிலுக்காக பெண்கள் போல் வேடமிட்டதாக நவீன் கூறியுள்ளார்.

Read more: மகாராஷ்டிராவில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு இந்த 5 விஷயங்கள் தான் காரணம்..!! அதில் ஒருநாளும் தவறியதே இல்லை..!

English Summary

woman-files-a-petition-about-her-husband

Next Post

"லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்"; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..

Sat Nov 23 , 2024
keerthy-suresh-rejects-intimate-scene

You May Like