சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் தொப்பக்காடு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, என்பவருக்கும் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 11 வயதில் தரணிஷ் என்ற மகனும், 9 வயதில் தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த 2016இல் கணவன் வேலுச்சாமி உயிரிழந்த நிலையில், மகன் தரணீஷ் இரும்பாலையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளான்.
மீனா எட்டிக்குட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டு அதே பள்ளியில் மகள் தர்ஷினியை படிக்க வைத்துக்கொண்டு எட்டிக்குட்டைமேடு பகுதியிலேயே வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மீனாவுக்கும் கள்ள தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு மகளுடன் தனியாக வசித்து வந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த மகள் தர்ஷினி கக்தியால் துப்பட்டாவை அறுத்த போது தாய் மீனா சடலமாக கீழே விழுந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, சிறுமி அக்கம் பக்கத்தினரிடம் கூறியதை தொடர்ந்து கொங்கணாபுரம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மற்றொருவருடன் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், வாடகை வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த கணவனையிழந்த மீனா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.