fbpx

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து கொலை செய்ய 3 மாதமாக திட்டமிட்ட இளம்பெண்….! ஆசிரியருக்கு நேர்ந்த கொடூர முடிவு….!

தென்கொரிய நாட்டில் கொலை செய்யும் ஆசை காரணமாக பெண் ஒருவரை கொலை செய்து உடல் உறுப்புகளை சுவைத்ததற்காக 23 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளம் பெண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கிரைம் நிகழ்ச்சிகளை பார்க்கும் புத்தகங்களில் வரும் கொலைகளால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவும், இந்த குற்றத்தில் ஈடுபட்டார் என்று காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் தான் அறிந்த கொலையை தானே நேரடியாக செய்து பார்க்க வேண்டும் என்று அந்த பெண் விரும்பி உள்ளார். என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். ஜங் யூ ஜங் என்று அடையாளம் காணப்பட்ட அந்த இளம் பெண், கடந்த வெள்ளிக்கிழமை அவரே ஒரு கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

முதலில் உயிரிழந்த பெண்ணை தானே கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு தான் சொல்லியது பொய் என்று தெரிவித்துள்ளார். அந்த பெண்மணி ஜங் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களிலிருந்து கொலை செய்யும் ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் மூலம் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டது என அந்த நாட்டு காவல் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததாவது, அவர் கொலை செய்வதற்கு பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு இருக்கிறார். அவருடைய கைபேசி உள்ளிட்டவற்றை கைப்பற்றி சோதனை நடத்தியதில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே உடலை மறைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை அவர் இணையதளத்தில் தேடியது தெரியவந்துள்ளது. குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்ததாகவும் கிரைம் புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பள்ளிவாசலியிடம் 9ம் வகுப்பு மாணவியின் தாயாக தன்னை காட்டிக்கொண்டு உரையாற்றிய கொலையாளி தன்னுடைய மகள் டியூஷன் கற்க வீட்டுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். குற்றம் நடைபெற்ற அன்றைய நாளில் ஜங் பள்ளி மாணவி போல சீருடை அணிந்து மாறுவேடமிட்டு ஆசிரியை வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போனதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த உடலை துண்டு, துண்டாக வெட்டி ஒரு சூட்கேஸில் அடைத்து காட்டுப்பகுதியில் வீசி இருக்கிறார். இந்த கொலை நடந்த பிறகு தடயத்தை மறைப்பதற்காக ஆசிரியையின் கைபேசி, அடையாள அட்டை, பர்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் கொலையாளி அவரே வைத்துக் கொண்டு இருந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் கொலை செய்தவர் அந்த பிணத்தை சூடேசியில் அழைத்து காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்றபோது, ஒரு டாக்ஸியில் சென்றிருக்கிறார் அந்த டாக்ஸி ஓட்டுநர் சந்தேகம் அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததால் கொலையாளி காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார். காவல்துறையினர் அங்கு சென்று ரத்தக்கறை படிந்த ஆடைகளை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜங் தான் கொலை செய்ததற்காக வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அவர் ஒரு மனநோயாளியா என்பதை நாங்கள் அறிந்து கொள்ள பரிசோதித்து வருகிறோம். கொலையாளி தனிமையாக இருந்து கொண்டிருக்கிறார். 5 வருடங்களுக்கு முன்னர் பட்டம் பெற்றதிலிருந்து வேலையில்லாமல் இருந்து வந்திருக்கிறார் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா..? அப்படினா இதை தினமும் குடிங்க..!!

Mon Jun 5 , 2023
தங்கள் உடலில் கூடுதலாக இருக்கும் எடையை குறைக்க பலரும் டயட் மற்றும் உடற்பயிற்சி என மாறி மாறி முயற்சித்து வருகின்றனர். ஆனால், பலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் முடிவு கிடைப்பது கடினமாக இருக்கிறது. இதற்கு காரணம் எடை இழப்பு முயற்சியை ஒரு முழுமையான திட்டமாக அவர்கள் உருவாக்காதது தான். பொதுவாக எடை இழப்பு பயணம் என்பது ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மற்றும் உடல் செயல்பாடு என இரண்டையும் உள்ளடக்கியதாக […]

You May Like