fbpx

“குழந்தை இருந்தா கள்ளக்காதலன் கூட சந்தோசமா இருக்க முடியாது” பெற்ற மகளை கொடூரமாக கொன்ற தாய்..

உத்தரப் பிரதேசம், காசிப்பூர் நகர் அருகே உள்ள பாவ்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் சக்ரா கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா. இந்த தம்பதிக்கு 8 வயதான சிவாங்கி என்ற மகளும், 3 வயதான ஆயுஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மே 11 தேதி பிந்து, தனது சகோதரர் பப்லு ராஜ்பர் வீட்டிற்க்கு சென்றுள்ளார். பின்னு அங்கிருந்து தான் தனது மாமியார் வீட்டிற்க்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் தனது மாமியார் வீட்டிற்க்கு செல்லவில்லை. மாறாக அவர் கதேவா பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலன் லாலா ராஜ்பர் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இவர்களின் கள்ளக்காதலுக்கு இவர்களின் குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இதனால், கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருவரும் சேர்ந்து எட்டு வயது மகள் சிவாங்கியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், சிவாங்கியின் உடலை அவர்களே அடக்கம் செய்துவிட்டு, குழந்தையை காணவில்லை என நாடகம் ஆடியுள்ளனர். இதையடுத்து குழந்தையின் மாமா பப்லு ராஜ்பர் ராஸ்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெற்ற தாயே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகளை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பிந்து மற்றும் அவரின் கள்ளக்காதலன் ராஜ்பர் ஆகியோர் மீது கொலை செய்வது, ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி பிந்து மற்றும் ராஜ்பர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

Read more: ஓசியில் பைக் சர்வீஸ் பண்ணித்தர சொல்லி டார்ச்சர்..!! கஞ்சா கேஸ் போடுவதாக மிரட்டி ஒர்க் ஷாப் ஓனரை தாக்கிய போலீஸ் எஸ்.ஐ.!!

English Summary

woman killed her 8 years old daughter along with his lover in uttar pradesh

Next Post

நீங்கள் விரும்பும் நபர் உங்கள் கனவில் அடிக்கடி தோன்றினால் என்ன அர்த்தம் தெரியுமா..?

Mon Jan 6 , 2025
What does it mean if you see someone you love in your dream?

You May Like