சேலம் டவுனில் உள்ள மனியனூரை சேர்ந்தவர் செந்தில்முருகன். லாரி டிரைவரான இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவனை பிரிந்த ஜோதி, தனது தாய் வீட்டுக்கு அருகில் குடியிருந்து வருகிறார். செந்தில்முருகனும், மணியனூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்த பிறகு ஜோதிக்கும் சுரேஷ் என்பவருக்கு கள்ளக்காதல் இருந்துள்ளது. இது குறித்து அறிந்த செந்தில்முருகன் தனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.
கடந்த 24ந் தேதி ஜோதியின் தம்பி செந்தில்முருகனுக்கு போன் செய்து உங்கள் மகனுக்கு உடம்பு சரியில்லை என கூறியுள்ளார். இந்நிலையில், தனது மகனை பார்க்க வந்த செந்தில்முருகன், குடிபோதையில் தனது மனைவியை திட்டிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். பினர், ஜோதி தனது கள்ளக்காதலனை வரும்படி கூறியுள்ளார். பின்னர் இரண்டு பேரும் சேர்ந்து ரீப்பர் கட்டையால் வாய், மூக்கில் அடித்துள்ளனர். இதில் செந்தில்முருகன் உயிரிழந்துள்ளார். செந்தில்முருகன் உயிரிழந்ததை அறிந்ததும் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், சென்னகிரியில் உள்ள ஒரு வீட்டு ஓரம் செந்தில்முருகன் மயங்கி கிடப்பதாக, ஜோதி செந்தில்முருகனின் தாயிடம் போனில் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்முருகன் தாய், இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே அவரது கள்ளகாதலனான சுரேஷுடன் சேர்ந்து செந்தில்முருகனை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.