fbpx

நண்பர்களுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி.! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்.!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி அவரது காதலன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நெடும்பூர் ஊராட்சியில் டேங்கர் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் மாமல்லன். இவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் மகாலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை மாமல்லன் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். இந்தக் கள்ளத் தொடர்பு காரணமாக தனது ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் சிதம்பரத்தில் குடியேறி இருக்கிறார் மாமல்லன்.

இந்நிலையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார் அவரது மனைவி மகாலட்சுமி. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து நெடும்பூருக்கு வேலைக்கு சென்று வந்த மாமல்லன் சாலை ஓரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகாலட்சுமியை கைது செய்து விசாரித்ததில் உண்மை வெளியாகியிருக்கிறது.

மகாலட்சுமி தனது கள்ளக்காதலனின் நண்பர்களான நாகராஜன் மற்றும் இளவேந்தன் ஆகியோருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறாரா ரஜினி..? திடீரென தூத்துக்குடிக்கு வந்தது ஏன்..?

Tue Dec 26 , 2023
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் […]

You May Like