வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக செக்ஸ் டாய் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அந்தப் பொருளை கஸ்டம்ஸில் பிடித்து வைத்ததோடு அவருக்கு அகைன்ஸ்ட் பப்ளிக் மொரலிட்டி நோட்டிஸ் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கை பல வழக்கறிஞர்களும் கையிலெடுக்க தயங்கிய நேரத்தில் இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கி இந்த வழக்கில் அவருக்கு வெற்றியையும் தேடி கொடுத்திருக்கிறார். இவருக்கு பல்வேறு விதமான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக செக்ஸ் டாய் ஆர்டர் செய்திருக்கிறார். இந்தப் பொருள் விமானம் மூலமாக வந்திரங்கியபோது கஸ்டம் அதிகாரிகள் அந்த பொருளை கைப்பற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை ஆர்டர் செய்த பெண்ணுக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பினர். ஒரு பெண் என்பதால் இவ்வாறு நடத்தப்பட்டாரா? அல்லது கஸ்டம்ஸின் வழக்கமே இதுதானா? என தெரியாமல் அந்த பெண் குழம்பி போய் இருக்கிறார்.
வழக்கை சந்திக்க அவர் தயாராக இருந்த போதிலும் இந்த வழக்கில் அவர் சார்பாக ஆஜராகி வாதாடுவதற்கு எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை. இந்நிலையில் சென்னையைச் சார்ந்த திலகவதி திலோ என்பவர் அந்தப் பெண் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகி செக்ஸுவல் பிரைவசிக்கும் பப்ளிக் மொரலிட்டிக்கும் இடையில் என்ன சம்பந்தம்? என்ற முறையில் இந்த வழக்கை அணுகி மனுதாரரை வெற்றி பெறச் செய்திருக்கிறார், குறிப்பாக சுங்கத்துறையின் சட்டத்தின்படி பப்ளிக் மொரலிட்டியில் செக்ஸ் டாய் பற்றிய எந்த விளக்கங்களும் இல்லை என சில வழக்குகளை உதாரணமாக காட்டிய அவர் செக்ஸ் டாய் என்பது ஆபாசம் இல்லை எனவும் அது ஒருவரின் தனிப்பட்ட பாலியல் தேர்வு என்று கூறி வாதாடி இருக்கிறார். இதன் மூலம் அந்த பெண்ணிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு அவர் ஆர்டர் செய்த செக்ஸ் டாய் அவரிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆஜராகி வாதாடிய இளம் வழக்கறிஞரை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.