மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெயில், நிஷா மற்றும் ஆகாஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 12 வயதான மகள் உள்ளார். இந்நிலையில் நிஷாவிற்கு பராக்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, தனது 12 வயது மகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க அதிக பணம் தேவைப்படுவதாக நிஷா ஆகாஷிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், “உங்களின் ஒரு சிறுநீரகத்தை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பொருளாதார பிரச்னைகளை தீர்க்க முடியும்” என்று கடந்த ஒரு வருடமாக நிஷா ஆகாஷிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது மனைவி கூறுவது சரி என்று நினைத்த ஆகாஷ், தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முடி செய்துள்ளார். இதற்கான புரோக்கர்கள் மூலம் ஒரு சிறுநீரகத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் ஆகாஷிற்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர், தனது கணவரை வீட்டிற்கு அழைத்து வந்த நிஷா, நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம், வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள் அப்போது தான் விரைவில் குணமடைவீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆகாஷ் அலமாரியில் வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் இருக்கிறதா என்று பார்த்துள்ளார்.
ஆனால் அலமாரியில் இருந்த ரூ. 10 லட்சமும் காணவில்லை. பின்னர் ஆகாஷ் தனக்கு நடந்த சம்பவங்களை குறித்து தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்களின் உதவியுடன் ஆகாஷ் நிஷாவை தேடியுள்ளார். அப்போது தான், நிஷா கொல்கத்தாவின் பராக்பூர் பகுதியில் உள்ள அவரது கள்ளக்காதலனுடன் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆகாஷ், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், நிஷா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அப்போது நிஷா தனது கள்ளக்காதலனிடம் இருந்து வர மறுத்துவிட்டார். மேலும், தனது கணவரை விவாகரத்து செய்வதாகவும், தனது மாமியார் தன்னை கொடுமை செய்ததாகவும் அது மட்டும் இல்லாமல், வீட்டில் இருந்த ரூ. 10 லட்சத்தை தான் எடுத்து செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: 11 வயது பேத்தி மீது தாத்தாவிற்கு ஏற்பட்ட ஆசை; பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி செய்த காரியம்..