fbpx

“வரதட்சணை கொடுக்காத மனைவி, எனக்கு எதுக்கு?”; வரதட்சணை கொடுக்காததால், கணவன் செய்த கொடூரம்..

மதுரை மாவட்டம், பேரையூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவருக்கும் செல்வபிரியா என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு 3 வயதான குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும், சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு செல்வபிரியாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் திருமணம் ஆனது முதல் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொரு முறை சண்டை வரும் போதும், செல்வபிரியா தனது தந்தை வீட்டிற்க்கு சென்று விடுவார். பின்னர் இரு தரப்பிலும் கலந்து பேசி செல்வபிரியாவை அவரது கணவன் வீட்டுக்கு அனுப்பி வைப்பதுண்டு. வழக்கம் போல் நேற்று முன்தினம் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி, செல்வபிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செல்வபிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சின்னச்சாமி மற்றும் அவரது பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் சின்னசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maha

Next Post

அதிவேக 3000 ரன்களை கடந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்..! அடுத்த நிமிடமே ஏற்பட்ட பரிதாபம்..!

Tue Oct 10 , 2023
உலகக்கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இளநகை அணி மோதி வருகின்றன. இதை முதலில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது, குறிப்பாக இலங்கை அணியின் குஷால் மெண்டிஸ் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இதில் 14 பௌண்டரீஸ், 6 சிஸேர்கள் அடங்கும், அதன் பிறகு களமிறங்கிய சதீர சமரவிக்ரமாவும் 89 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய […]

You May Like