சென்னை மாவட்டம், பள்ளிக்கரணை பாரதிதாசன் முதல் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. ஆனால், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக, மகாலட்சுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில். வேலையை முடித்து விட்டு வீட்டிற்க்கு வரும் மகாலட்சுமியிடம் ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்? என்று கேட்டு, கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
வேலை முடிய இரவு தாமதம் ஆகும் நிலையில், மகாலட்சுமி ஆட்டோவில் வருவதும் வழக்கம். சம்பவத்தன்று, மகாலட்சுமி இரவு சற்று தாமதமாக ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, எதுக்கு ஆட்டோவில் வந்து இறங்குகிறாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவி மகாலட்சுமியை காய்கறி வெட்டும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் 6 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
Read more: 2024-ல் பாக்ஸ் ஆபிஸை மிரள வைத்த டாப் 10 தமிழ் படங்கள்..! ஃபிளாப்பான படங்களும் லிஸ்ட்ல இருக்கு…!