fbpx

இளம்பெண்ணின் “அந்த பகுதியை” நடுரோட்டில் வைத்து பிடித்த 10 வயது சிறுவன்; வெளியான அதிர்ச்சி வீடியோ..

தற்போது உள்ள காலகட்டத்தில், அறைக்குள் அல்ல, பொது வெளியிலும் கூட பெண்கள் பாதுகாப்பாக இல்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மற்றொரு பக்கம் ஒரு பெண் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்களை பற்றி கூறினால் கூட பெரும்பாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை, வீடியோ ஆதாரம் இருக்கிறதா என்று தான் கேட்கிறார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் தான் இப்போது ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.

நேஹா பிஸ்வால் என்ற இளம் பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் இன்புளுயன்சரான இவர், பெங்களூரு நகர சாலையில் நடந்துக்கொண்டே வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுவன் ஒருவன், அந்த பெண்ணின் மார்பகத்தை பிடித்து விட்டு, எதுவும் நடக்காதது போல் சென்றுள்ளான். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, அந்த பெண் சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளார். மேலும், ” எனக்கு இந்த மாதிரி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. நான் சாலையில் நடந்து கொண்டே வீடியோ பதிவு செய்த போது எனக்கு பின்னால் சைக்கிளில் வந்த 10 வயது சிறுவன், என்னை கடந்து சென்று விட்டு, பின்னர் சைக்கிளை திருப்பி என்னை நோக்கி வந்தான். பின்னர், அவன் என்னை தகாத முறையில் என்னை சீண்டினான்.

உடனடியாக நான் சத்தம் போட்டதும், அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை பிடித்தனர். அவர்களிடம் நான் என்ன நடந்தது என்று கூறினேன், ஆனால் அவர்கள் இவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று கூறி அவன் மீது மீது கருணை காட்டினார்கள். அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்ததால் அவர்களிடம் நான் எடுத்த வீடியோவை காட்டினேன். அப்போது தான் அவர்கள் அதை நம்பினார்கள். நான் அந்த சிறுவனை அடித்தேன். அங்கிருந்த சிலரும் அந்த சிறுவனை அடித்தார்கள். ஆனால் அந்த சிறுவனின் மீது போலீசில் புகார் கொடுத்து அவனது எதிர்காலத்தை அழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் அந்த சிறுவனை இது தொடர்பாக கண்டிக்க வேண்டும் ” என்று நேஹா பிஸ்வால் பேசியுள்ளார். மேலும், இந்த வீடியோ தொடர்பாக தானாக முன்வந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: 3 வருடத்திற்கு முன் நடந்த விவாகரத்து; கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகையின் புகைப்படம் வைரல்!

English Summary

woman-was-sexually-harassed-by-a-small-boy-in-road

Next Post

குற்றத்தை தீர்மானிக்கும் உரிமை ஊடகங்களுக்கு கிடையாது..!! - கேரள உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Fri Nov 8 , 2024
Media's freedom not a licence to decide guilt: Kerala High Court

You May Like