திருச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஆசிரியை 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கஜப்பிரியா (35). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கார்த்திக் என்பவரை பேஸ்புக் மூலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி சமயபுரம் கோவிலில் வைத்து கார்த்திக் மற்றும் கஜபிரியா திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் கஜப்பிரியா. இந்நிலையில் அவரது கணவருடன் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் கஜபிரியா.
அவரது பெற்றோர் வெளியே சென்று நிலையில் வீட்டில் தனியாக இருந்த கஜபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமான 6 மாதத்தில் அவர் தற்கொலை செய்திருப்பதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.
English Summary:Nesr Tiruchirapalli district 35 year old woman commits suicide after a fight with her husband.They got married 6 months ago.They met im facebook and being in relationship for 2 years.